நீட் தேர்வு எழுதும் மாணவிக்கு ஹால் டிக்கெட் பெற உதவிய பாஜக நிர்வாகி
திருவள்ளூர் அருகே நீட் தேர்விற்கு இணையத்தில் தவறுதலாக பணம் செலுத்தி ஹால் டிக்கெட் வரததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவிக்கு தேர்வு எழுதுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக ஹால் டிக்கெட் பெற்று கொடுத்த பா.ஜ.க நிர்வாகிகளின் செயல் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் பயிலவும், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அதன்படி, 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 7-ம் தேதி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 15-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) எழுதத் தகுதியான மாணவர்களின் ஹால்டிக்கெட்களை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) இணையதளத்தில் வெளியிட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் என்பவரி மகள் சாந்த பிரியா என்ற மாணவி நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தார். இதற்கான கட்டணத்தை எப்படி செலுத்துவது என தெரியாமல் Gpay மூலமாக செலுத்தியுள்ளார். இதனால் செலுத்திய கட்டணம் முறையாக செலுத்தாததால் இந்த மாணவிக்கு நீட் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வராததால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி இது சம்பந்தமாக பெற்றோர்களிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
தேர்வு எழுத இரண்டு நாட்களே உள்ள நிலையில் இது குறித்து தகவல் அறிந்த பா.ஜ.க மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் சாகுல் அமீது பிரதமரின் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக நடந்ததை தெரிந்து ஏழை மாணவிக்கு ஹால் டிகெட்டை தேர்வு எழுதுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாகவே பா.ஜ.க மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் சாகுல் அமீது மற்றும் பா.ஜ.கவின் ஒன்றிய தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மாணவியின் வீட்டுக்கே சென்று நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வழங்கினர்
ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொண்ட மாணவி மாணவி சாந்த பிரியா துரித நடவடிக்கை எடுத்த பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி கூறினார். இந்நிகழ்வில் உடன் பா ஜ க நிர்வாகிகள் பக்தவச்சலம், அஜய் ராஜ்குமார், முருகன் சத்யா குமார் அசோக் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்
மேலும் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu