திருவள்ளூரில் அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதம்

திருவள்ளூரில் அதிகாரிகளுடன் பாஜகவினர் வாக்குவாதம்
X

அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

திருவள்ளூர் பாஜக அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட பேனரை அகற்ற கூறிய அதிகாரிகளிடம் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஏப்ரல் மாதம் 19.ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16ஆம் தேதியன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து திருவள்ளூர் தனித் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு அவர்கள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு தேர்தல் பறக்கும் படையினர் அரசியல் கட்சிகளின் பேனர்கள், கட்சி கொடி கம்பங்கள் போன்றவைகள் எங்கேனும் வைக்கப்பட்டுள்ளதா என 24 மணி நேரமும், சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தேர்தல் பறக்கும் படையினர் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா என சோதனை மேற்கொண்டு வந்தனர். அப்போது அதிகாரிகள் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திற்கு வெளியில் கட்சி பேனர் வைக்கப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள், உடனடியாக அவற்றை அகற்றவும் மற்றும் அலுவலகம் மீது பறக்கும் கட்சி கொடியை அகற்ற வேண்டுமென்று திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பா.ஜ.க.கட்சி நிர்வாகிகளிடம் கூறினர்.

அதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பேனர்களை அகற்ற முடியாது என வட்டாட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ.க.ஓ பி சி அணியின் தலைவர் லோகநாதன் வட்டாட்சியர் பேனரை அகற்ற வேண்டும் என்று கூறியதற்கு பேனரை அகற்ற முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு ஏற்பட்டது.

இதனிடையே கட்சி நிர்வாகிகளுக்கும் வட்டாட்சியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைக் கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுளித்தவாறு சென்றனர்.தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
ai healthcare technology