திருவள்ளூரில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால கணபதி ஆதரித்து திருவள்ளூர் நகரத்தில் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பால கணபதி ஆதரித்து திருவள்ளூர் நகரத்தில் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் பாஜக சார்பில் பாலகணபதி போட்டியிடுகிறார் இவரை ஆதரித்து பாஜக வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் ஏற்பாட்டின் பேரில் திருவள்ளூர் நகரத்தில் ஜெயா நகர் சேலை ரோடு இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
பிரச்சாரத்தின் போது, கடந்த ஐந்து ஆண்டு திருவள்ளூர் தனி தொகுதியில் எம் பி ஆக இருந்த காங்கிரஸ் கட்சி சேர்ந்த ஜெயக்குமார் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. அவர் எதிர்க்கட்சியாக இருப்பதால் அவரால் எந்தவித நன்மையும் செய்ய முடியவில்லை. என்னை வெற்றி பெறச் செய்தால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய இருப்பதால், இந்த தொகுதிக்கு என்னால் அனைத்து வசதிகளையும் செய்து தர முடியும் என்றார்.
பிரச்சாரத்தின் போது ஓ.பி.சி.அணி மாநிலச் செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் கருணாகரன், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சீதாராமன், திருவள்ளூர் நகர தலைவர் சதீஷ்குமார், மற்றும் நிர்வாகிகள் ரமேஷ், ஆர் கே சேகர், என் என் குமார், முனியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu