உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கல்

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கல்
X

பெரியபாளையத்தில் திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 1000 பேருக்கு பிரியாணி இனிப்பு ஒன்றிய செயலாளர் மூர்த்தி வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது

பெரியபாளையத்தில் திமுக கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 1000 பேருக்கு பிரியாணி இனிப்பு ஒன்றிய செயலாளர் மூர்த்தி வழங்கினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினரும் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி.ஜெ.மூர்த்தி தலைமை வகித்தார்.

பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே கட்சி கொடியை ஏற்றி வைத்த பின்னர், பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 1000-க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி இனிப்புடன் வழங்கப்பட்டது இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி. ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி வி.பி. ரவிக்குமார், ஒன்றிய அவைத் தலைவர் பி.என். ரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கடேசன், டில்லி சங்கர், முன்னாள் பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, மற்றும் நிர்வாகிகள் மொய்தீன், சம்பத், அசோகன், வடமதுரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், சம்பத், விமல், கௌதமன்,பன்னீர், மூர்த்தி, சீனு,ராஜா, தமிழரசு, சுப்பையன், அன்பு, பெரியசாமி, பாலையா, நாகசாமி, ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்..



Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!