பைக் மெக்கானிக்கை இளைஞர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்..!
பைக் மெக்கானிக்கை அடிக்கும் சிசிடிவி காட்சிகள்.
சதுரங்கப்பேட்டை பகுதியில் பைக் மெக்கானிக் மோகன் தாஸ் என்பவரை இரண்டு இளைஞர்கள் சரமாரியாக கைகளாலும் இரும்பு கம்பியாலும் தாக்கி தலையில் வரும் ரத்தத்தை துடைத்து விட்டு மீண்டும் தாக்கும் சிசிடிவி வீடியோ வைரல் பென்னலூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதித்து விசாரணை.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே மோவூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்தாஸ் சதுரங்கப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாலை வழக்கம்போல் அவரது மெக்கானிக் கடையில் வாகனங்களை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது நெய்வேலி கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்து எனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி பழுதடைந்த இருசக்கர வாகனத்தின் செயினை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு ஏற்கனவே வேறொரு இரு சக்கர வாகனத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்த மோகன்தாஸ் அந்த வாகனத்தை முடித்துவிட்டு பத்து நிமிடத்தில் சரி செய்து தருகிறேன் கூறிய கூறியுள்ளார்.
இதனால் திடீரென கோபம் அடைந்த இளைஞர்கள் முதலில் எனது வாகனத்தை சரி செய்து தரவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மெக்கானிக் மோகன் தாஸ் எதற்காக ஒருமையில் பேசுகிறீர்கள் என கேட்டதற்கு மோகன்தாசை இளைஞர்கள் தாக்கியுள்ளனர்.
மேலும் மெக்கானிக் கடையில் இருந்த இரும்பு கம்பியால் மற்றும் கைகளாலும் மோகன்தாஸை துரத்தி சர மாறியாக தாக்கியதால் நிலைகுலைந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது. அதில் ஒரு இளைஞர் பயந்து போய் அவர் நெற்றியில் வரும் ரத்தத்தை துடைத்தார். மற்றொரு இளைஞர் மீண்டும் மெக்கானிக் மோகன்தாஸிடம் ரகலையில் ஈடுபட்டு அடிக்கப் பாய்ந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை கண்டித்து அனுப்பிய பின்னர் காயமடைந்த மோகன்தாஸ் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து தென்னலூர் பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மெக்கானிக்கை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த சிசிடிவி காட்சிகளில் இளைஞர்கள் மெக்கானிக் மோகன்தாஸை முரட்டுத்தனமாக தாக்குவதும் அருகில் இருந்தவர்கள் இளைஞர்களை தடுக்க முயற்சிப்பதுமான காட்சிகளும் அதையும் மீறி மெக்கானிக் மோகன் தாசை இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது
இருசக்கர வாகன பழுது நீக்கும் மெக்கானிக்கை ஒருமையில் பேசி இளைஞர்கள் ரத்தம் சொட்ட சொட்ட தாக்கியுள்ள வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu