தை மாத இறுதி ஞாயிறையொட்டி பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தை மாத இறுதி ஞாயிறையொட்டி பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

பெரியபாளையம்  ஸ்ரீ பவானியம்மன்  கோயில் தோற்றம்.

Bhavani Amman Kovil Special Pooja பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் தை மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பக்தர்கள் வந்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் புறவழி சாலை அமைக்க பல்வேறு தரப்பு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Bhavani Amman Kovil Special Pooja

பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் தை மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலை மோதியதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் பக்தர்கள் வருகையால் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, என உள்ளிட்ட பல்வேறு அண்டை மாநிலங்கள் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை பெரியபாளையம் வந்து வாடகைக்கு விடுதி எடுத்து இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் மண்டபத்தில் பொங்கல் வைத்து, சிறுவர்கள் பெரியோர்கள் வரை மொட்டை அடித்து, வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து அம்மனுக்கு படையல் இட்டு கோவில் சுற்றி வளம் வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

Bhavani Amman Kovil Special Pooja


தை இறுதி ஞாயிறன்று பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்

இந்த நிலையில் நேற்று தை மாதம்இறுதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஸ்ரீ பவானி அம்மனுக்கு அதிகாலை முதல் பால்,தயிர், சந்தனம்,ஜவ்வாது, பன்னீர்,உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டு ஆடைகளால், வண்ண,வண்ண மலர்களால், திரு ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஸ்ரீ பவானி அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே பக்தர்கள் கொண்டு வரும் வாகனத்தினால் சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.இதன் காரணமாக சுமார் 3 மணி நேரம் பெரியபாளையம் பஜார் பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. மேலும் பஜார் பகுதியில் மழைநீர் செல்ல 3. 75 லட்சம் மதிப்பீட்டில் சமீபத்தில் வடித்தால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் பணிகளால் பஜார் பகுதியில் பல்வேறு பகுதிகளில் கால்வாய் பணிகள் முடிந்து சரி வரை அவற்றை மூடாததால் ஆங்காங்கு தடுப்புகளை போலீசார் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது இதனால் சாலை குறுகிய அளவில் காணப்படுகிறது.

Bhavani Amman Kovil Special Pooja


பெரியபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

மேலும் போக்குவரத்து காவலர்கள் இல்லாத காரணத்தினால் பெரியபாளையம் சந்திப்பு சாலை பகுதியில் மாலை காலை என இரு வேலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் சுமார் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு வாகனங்கள் நின்று ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி போக்குவரத்து சிக்னல் லைட் இருந்தும் செயல்படாமல் உள்ளது.

இது குறித்து பகுதி மக்களும், சமூக ஆர்வலர்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் என பல்வேறு தரப்பு மக்கள் தெரிவிக்கையில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் அமைந்திருக்கும் பெரியபாளையத்தில் போதிய இடம் வசதி இல்லாத காரணத்தினால் விழா காலங்களில், மற்ற நாட்களில் அம்மனை தரிசனம் செய்ய பெரியபாளையம் வரும்போது எல்லாம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதாக எனவே அரசு கண்டு கொண்டு சாலை இருப்பரங்களில் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவு படுத்த வேண்டும் எனவும், கனரக வாகனங்கள் சென்று வர புறவழிச் சாலையை அமைப்பதால் விபத்துகள் குறையும் எனவும், இவ்வாறு தெரிவித்தனர் எனவே அரசு கண்டு கொண்டு பக்தர்கள் நலனை கருதி மேற்கண்ட வசதிகளை செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பு மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story