திருவள்ளூரில் போக்குவரத்திற்கு இடையூறான பேனர்கள்: அப்புறப்படுத்த கோரிக்கை
நேற்று இரவு பெய்த மழை மற்றும் காற்று வீசியதின் காரணமாக திருவள்ளூரில் வைத்துள்ள பேனர்கள் சரிந்து உடைந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது விழும் நிலையில் உள்ள பேனர்களால் மாணவர்கள் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியின்றி விதிமுறைகளை மீறி திருவள்ளூர் நகரத்தில் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளது. சில பேனர்கள் சாலைகளை மறைத்தும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட தேரடி அருகே திருவள்ளூர் செங்குன்றம் சாலை வடக்கு ராஜ வீதியில் வைக்கப்பட்டுள்ள புரட்சி பாரத கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி மற்றும் மணமகன் -மணமகள் புகைப்படங்கள் அச்சிடப்பட்டு திருமண வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இது நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததின் காரணமாகவும் காற்றின் காரணமாகவும் இரும்பு கம்பிகள் பாதி அளவுக்கு பெயர்த்து சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை பக்ரீத் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நாள் என்பதால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.பேனர் அருந்து பாதி அளவிற்கு கீழே தொங்கும் பேனரால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்.மாணவ, மாணவியர் அச்சத்துடன் நடந்தும் கடந்து செல்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் உரிய அனுமதியின்றி விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த திருமண வாழ்த்து பேனர்களை அப்புறப்படுத்தி சென்றனர். மேலும் உரிய அனுமதியின்றி பொது மக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் பேனர்களை அகற்ற நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu