திருவள்ளூர் பாஜக வேட்பாளராக பால கணபதி அறிவிப்பு

திருவள்ளூர் பாஜக வேட்பாளராக  பால கணபதி அறிவிப்பு
X
திருவள்ளூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளராக மாநில பொதுச் செயலாளர் பாலகணபதி அறிவிக்கப்பட்டுள்ளார்

நடைபெற உள்ள திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சி சார்பில் நல்லதம்பி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த காவனூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகணபதி (வயது 46) அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பரமக்குடி சட்டசபை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார் அதிமுக- திமுகவை தொடர்ந்து மூன்றாம் இடம் பிடித்தார்

பொறியியல் பட்டதாரியான இவர் முழுநேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த 1999இல் கிளைத் தலைவராக கட்சியில் பொறுப்பு வகித்து வந்த பால கணபதி தற்போது மாநில பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி மனைவி மீனாட்சி இவர் தற்போது திருவள்ளூர் கூடுதல் கண்காணிப்பாளராக உள்ளார் இவருக்கு இரு மகன்கள் ஹரீஷ் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு பொன் முருக பூபதி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!