மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி
மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை பயிற்சி ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூரில் மழை நீர் சேமிப்பின் அவசியம் குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை பயிற்சி ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக குடிநீர் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் குப்தா, மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.இந்த பேரணியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொண்டு திருவள்ளூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மழை நீர் சேகரிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி பராமரிக்க வேண்டும். கண்மாய்கள்,குளங்கள், ஊரணிகள், ஏரிகள், நீராதார கட்டமைப்புகளை ஆழப்படுத்தி மேம்படுத்த வேண்டும்,வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வீட்டுக் கூரையை மழைக்காலத்திற்கு முன் சுத்தம் செய்து,காய்ந்த இலைகளை அப்புறப்படுத்த வேண்டும், மழைநீர் சேமிப்பு தொட்டியில் பிளீச்சிங் பவுடர் சேமிக்கப்பட்ட மழைநீரில் கலக்க வேண்டும்,மழைநீர் கொண்டு வரும் குழாய்களில் அடைப்புகளை நீக்கி பழுதுகளை சரிசெய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்தப் பேரணியில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் அ.அமலதீபன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசுதா, உதவி பொறியாளர் ப.சம்பத்குமார் கள நீர் பரிசோதனை ஆய்வாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள், அரசு துறை அலுவலகங்கள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu