தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி!
இன்றைய காலகட்டத்தில் நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய ஆயுதம் தகவல் உரிமை சட்டம் என தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்க மாவட்ட தலைவர் டி.சடகோபன் கூறினார்.
திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, மற்றும் தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மையம் இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் தோற்றுவிக்கப்பட்ட நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள காலவள கண்ணன் செட்டி இந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் பி. சத்யா தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய மாவட்ட தலைவர் டி. சடகோபன் பள்ளி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி வளாகம் மற்றும் அருகில் உள்ள வீதிகளில் வளம் வந்த பேரணி மீண்டும் பள்ளிக்கு வந்து நிறைவடைந்து.
இதை தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர். எம். ஜெகதீஷ் சந்திர போஸ் கலந்து கொண்டு பேசினார். அவரைத்தொடர்ந்து டி. சடகோபன் பேசும்போது, நுகர்வோர் அமைப்பு சார்பில் மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் கேட்டுப் பெறலாம். ரேஷன் பொருள் கிடைக்கவில்லையா? தரமான சாலை அமைக்கப்படவில்லையா? அரசு சொத்து கொள்ளை போகிறதா அதுபோன்ற எந்த தகவலையும் கேட்டுப் பெறலாம் இன்றைய காலகட்டத்தில் நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய ஆயுதம் இந்த தகவல் உரிமை சட்டம் என்றார்.
இதில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் சி.செல்வராஜ் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எப்படி விண்ணப்பிப்பது அதன் மூலம் எப்படி நமக்கு தேவையான தகவலை பெறுவது என்ற வழிமுறைகளை விளக்கி கூறினார். உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.பள்ளியின் கணித ஆசிரியர் ஞானமுருகன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu