மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓசோன் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஓசோன் தினம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவள்ளூர் உட்கோட்டை நடுவர் கற்பகம் தலைமையில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் ஓசோன் படலத்தை காக்க வேண்டும் எனவும், அதிக புகை வெளியேற்றும் வாகனங்களை தவிர்க்க வேண்டும் குப்பை கழிவுகளை சரியான இடத்தில் கையாளப்பட வேண்டும்.
இனிவரும் போகி பண்டிகை உள்ளிட்ட காலங்களில் நச்சுப்புகை உள்ள டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து காமராஜர் சிலை வழியாக திருவள்ளூர் பேருந்து நிலையம் வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்தப் பேரணையானது திருவள்ளூர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த விழிப்புணர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu