திருவள்ளூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருவள்ளூர் வட்டார வாகன போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சாலைப்பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஒலி ஒளி காட்சி படம் மூலம் ஏற்படுத்தினார். திருவள்ளூர் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள தர்ம மூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார்.

விழிப்புணர்வு கூட்டத்தில் மாணவச் செல்வங்களுக்குமோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விளக்கவுரையை படக்காட்சி மற்றும் விபத்துக்களின் அசல் வீடியோக்கள் மூலம் வழங்கினார். இந்நிகழ்வில் சரக்கு வாகனங்களில் பள்ளி மாணவர்கள் பயணம் ஆட்டோவில் அதிக பள்ளிக்கூட மாணவர்கள் பயணம் இருக்கைப் பட்டை அணிவதின் முக்கியத்துவம் இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணிப்பதில் வரும் விளைவு, சிறியவர்கள் வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் விபத்து குறித்தும் மற்றும் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மிகவும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பெற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில் மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அத்தனை கேள்விகளுக்கும் பொறுமையுடன் தெளிவுடனும் மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் பதிலளித்தார். 45 நிமிடம் நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்வின் முடிவில் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி மாணவர்களும் ஆசிரியர்களும் மோட்டார் வாகன ஆய்வாளருடன் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!