சிறைச் சாலையில் கைதிதற்கொலை முயற்சி

சிறைச் சாலையில்  கைதிதற்கொலை  முயற்சி
X

பைல் படம்

திருவள்ளூர் கிளை சிறைச்சாலையில் கைதி தண்ணீர் குடிக்கும் டம்ளரில் கழுத்தை அருத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.

சென்னை அடுத்த பட்டாபிராம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருட்டு வழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்களத்தூர் கலைஞர் நகரை சேர்ந்த பிரபாகரன் 46 என்பவரை பட்டாபிராம் போலீசார் கைது செய்து கடந்த 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

இந்நிலையில் பிரபாகரன் தண்ணீர் குடிக்க வைத்திருந்த டம்ளர் எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது கிளை சிறைச்சாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக பிரபாகரனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பிரபாகரனுக்கு முதலுதவி செய்யப்பட்டது இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் இது குறித்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!