தமிழர் விடுதலைப் படை தலைவர் வீரலட்சுமி கணவர் மீது தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரலட்சுமியின் கணவர்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு,பெரியார் நகர், எம்ஆர்கே தெருவில் வசித்து வருபவர் தமிழர் விடுதலைப் படை தலைவர் கி.வீரலட்சுமி. இவரது கணவர் கணேசன் (வயது-48). இவர்களது வீட்டின் அருகில் வசித்து வருபவர் வெங்கடேசன்.இவரது உறவினர் இறந்து விட்டதால் அதற்கான காரிய நிகழ்ச்சி நேற்று நடந்துள்ளது.
இந்த காரிய நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட இலைகளையும், குப்பைகளையும் கொண்டு கி.வீரலட்சுமியின் வீட்டின் அருகே கொட்டியுள்ளனர், இதனைப் பார்த்த கி.வீரலட்சுமியின் கணவர் கணேசன் எதற்காக என் வீட்டின் அருகே சாப்பிட்ட இலைகளை கொட்டுகிறீர்கள் என்று வெங்கடேசனை கேட்டுள்ளார். அப்போது இருவர்களுக்கும் வாக்குவாதம் உச்சத்தை ஏற்றி உள்ளது. ஒரு கட்டத்தில் வெங்கடேசன் வைத்திருந்த கட்டையால் கணேசனின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதனால் தலையில் பலத்த காயமடைந்த கணேசனை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தலையில் 25 தையல்கள் போடப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணா வழக்கு பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களான மணிகண்டன், பாஸ்கர், லட்சுமணன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu