திருவள்ளூர் அருகே மீன் பண்ணையில் கொத்தடிமை தம்பதியினர் மீது தாக்குதல்

திருவள்ளூர் அருகே மீன் பண்ணையில் கொத்தடிமை தம்பதியினர் மீது தாக்குதல்

தாக்குதலுக்கு ஆளான தம்பதியர்.

திருவள்ளூர் அருகே அரசியல் கட்சி பிரமுகர் தனது மீன் பண்ணையில் கொத்தடிமையாக இருந்த தம்பதியரை தாக்கியதாக புகார் கூறப்பட்டு வருகிறது.

திருவள்ளுர் அருகே மீன் பண்ணைக்கு கூலி வேலைக்கு சென்ற பழங்குடியினர் குடும்பத்தினரை கொத்தடிமையாக வைத்து சித்ரவதை செய்து தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாரி -தனலட்சுமி தம்பதியினர். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பூண்டி அருகே அரசியல் கட்சி பிரமுருக்கு சொந்தமான மீன் பண்ணையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

அவர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் சம்பளம் தரப்படும் என அழைத்து வந்து மாதம் வெறும் 5 ஆயிரம் மட்டும் சம்பளத்தை அளித்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கடனாக அந்த நபரிடம் குடும்பத்தினர் 15,000 ரூபாய் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் தொடர்ந்து அவருடைய மனைவி தனலட்சுமி ஆகியோரை அரசியல் பிரமுகர் கொடுமைப்படுத்தி தாக்கி அடிமையாக வேலை செய்து வைத்து வந்ததும்கோழிக்கு போடும் ரேஷன் அரிசியை அவர்களுக்கு வாங்கி கொடுத்து வேலை வாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. சித்ரவதை தாங்க முடியாமல் அவர்கள் வாங்கிய கடனை திருப்பி கொடுத்த போதும் அதை பெறாமல் அங்கேயே வேலை செய்ய அரசியல் கட்சி நிர்வாகி நிர்ப்பந்தித்துள்ளார்..

இதனால் மீன் பண்ணையில் இருந்து வேறொரு பகுதிக்கு வேலைக்கு சென்ற கணவன் மனைவியை இரவு அந்த நிர்வாகி தனது வீட்டுக்கு வரவைத்து அவர்களை காலில் எட்டி உதைத்தும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலைக்குச் சென்ற பழங்குடியினரை கொத்தடிமையாக வைத்தது மட்டுமின்றி அவர்களை கடுமையாக தாக்கி சித்திரை செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story