திருவள்ளூர் ஏகாட்டூரில் கல்லூரி மாணவனை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
Student News -திருவள்ளுவர் மாவட்டம் ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 16ஆம் தேதி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது ஜல்லி கற்கள் மற்றும் கத்திகளால் தாக்கிக் கொண்டனர். இதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கும் தக்கோலம் ராஜம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் (20) என்பவரை கத்தியால் தலையில் வெட்டினர். இதில் தலையில் பலத்த வெட்டு பட்ட மாணவரை மீட்டு.திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
திருவள்ளூர் இருப்புப்பாதை போலீசார் மருத்துவமனைக்கு சென்று படுகாயம் அடைந்த மாணவரை விசாரித்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.காயம் அடைந்த கல்லூரி மாணவன் தினேஷ்குமார் கொடுத்த தகவலின் பேரில் கடம்பத்தூரைச் சேர்ந்த ராகுல் (18), ரோகித் (18) மற்றும் திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய 3 பேர் என்பது தெரிய வந்தது.
மேலும் மாநிலக் கல்லூரி மாணவர்களுடன் ரயிலில் பயணிக்கும் நண்பர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் கைது செய்யப்பட்ட 3பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu