டிவி சேனல் மாற்றுவதில் அண்ணனுடன் தகராறு: தம்பி தூக்கிட்டு தற்கொலை

டிவி சேனல் மாற்றுவதில் அண்ணனுடன் தகராறு: தம்பி தூக்கிட்டு தற்கொலை
X

கோப்பு படம்


திருவள்ளூர் அருகே டிவி சேனல் மாற்றுவதில் அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் அருகே டிவியில் சேனல் மாற்றுவதில் அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் காவங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் இவர் கொத்தனார் ஆவார் இவருக்கு யுவன்சங்கர்( வயது16), மணிரத்தினம் (வயது 14) என்கின்ற இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர்.

மகன்கள் இருவரும் மப்பேடு அருகே உள்ள பண்ணூரில் உள்ள தனியார் பள்ளியில் யுவன் சங்கர் பதினொன்றாம் வகுப்பும், மணிரத்தினம் ஒன்பதாம் வகுப்பும் பயின்று வருகின்றனர்.

நேற்று இருவரும் பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்தனர்.ஆனால் அவரது பெற்றோர்கள் வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு கால தாமதமாக வருவது வழக்கம். அப்போது வீட்டிலிருந்த சகோதரர்கள் இருவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது இருவரும் டிவி சேனல் மாற்றுவது தொடர்பாக ஒருவருக்கு ஒருவர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மணிரத்தினம் சன் டிவி சேனல் வைத்து நாடக தொடர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

அவருடைய அண்ணன் யுவன்சங்கர் தம்பி இடமிருந்து டிவி ரிமோட் பிடுங்கி கிரிக்கெட் சேனல் வைத்து மாற்றியதாக கூறப்படுகிறது.இதனால் அண்ணன் தம்பி இருவரும் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இதனால் மணிரத்தினம் மனவேதனை அடைந்து வீட்டிற்கு பின்னால் இருந்த புளிய மரத்தில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தம்பி அடிக்கடி சண்டை போட்டு கோபித்துக் கொண்டு சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவார் என்பதால் அண்ணன் டிவியில் கிரிக்கெட் சேனல் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

நேரமாகியும் தம்பி வீட்டுக்கு வராததை கண்ட அண்ணன் வீட்டுக்கு பின்னால் சென்று பார்த்த போது புளிய மரத்தில் தம்பி மணிரத்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அண்ணன் துடிதுடித்து போனார்.

அதைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் பார்த்து மணிரத்தினம் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மணிரத்தினம் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து அவருடைய உடல் மருத்துமனை வளாகத்தில் உள்ள

உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு பின்னர் உடற்கூறு ஆய்வு முடிந்த பின் அவர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிவியில் சேனல் மாற்றுவதில் அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடம்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்