அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

அன்னபூர்ணாம்பிகை உடனுறை  ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
X

பெரியபாளையத்தில் ஸ்ரீ அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரியபாளையம் அன்னபூர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

பெரியபாளையத்தில் அருள்மிகு ஸ்ரீ அன்னபூர்ணாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான யாக கலச பூஜைகள்,கோ பூஜை, கணபதி ஹோமம், நவகிரக பூஜை, உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் கடந்த மூன்று தினங்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் நிறைவு நாளான இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை கொண்டு கோவில் கோபுரத்தின் மீதுள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தினர்.


அப்போது அங்கு கூடியிருந்த பெரும் திரளான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்ற திருமந்திரத்தை முழங்கியபடி பக்தி பரவசத்துடன் சுவாமியை வழிபட்டனர். அங்கு வந்திருந்த பெருந்திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அன்னை ஸ்ரீ அன்னபூர்ணாம்பிகை, ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் மற்றும் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால் சந்தனம் தயிர் இளநீர் சந்தனம் ஜவ்வாது திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு, வண்ண மலர்களால் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து,தீப தூபாராதனைகளும் நடைபெற்றது.

கோவில் நிர்வாகம் சார்பில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமிகளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது இதனைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக விழா நடைபெற உள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!