திருவள்ளூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவக்கம்

திருவள்ளூரில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவக்கி வைப்பதற்கு முன் மாவட்ட ஆட்சியர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்தார்.
பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தொழில்முனை வோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் என்னும் திட்டத்தினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அறிமுகப் படுத்தி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பாக பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் என்னும் திட்டம் துவக்க விழா மாவட்ட தொழில் மையம் மேலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி குத்துவிளக்கேற்றி இந்த திட்டத்தினை அறிமுகம் படுத்தி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தொழில்முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர்க்கு உற்பத்தி வணிகம் மற்றும் சேவை சார்ந்த அனைத்து விதத் தொழில் திட்டத்திற்கு மற்றும் வணிக நிர்வாகத்திற்கும் கடன் உதவியோடு இணைந்து மானியம் வழங்கப்பட உள்ளது.
மேலும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி தேவையில்லை. மேலும் இந்த திட்டத்தில் 65 சதவீதம் வங்கி கடனும் 35 சதவீதம் அரசின் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் தங்களின் பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டிய தேவையில்லை என்றும் இந்த திட்டத்தில் கடன் பெறும் பயனாளிகளுக்கு 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும் என்றும் ஆர்வமுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சார்ந்த தொழில் முனைவோருக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல், திட்ட அறிக்கைகள் தயாரித்தல் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான அனைத்து உதவிகளும் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும் தொழில் முனைவோர் மேம்படுத்த பயிற்சி மட்டும் திட்டம் சார்ந்து சிறப்பு பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும் எனவே பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த தொழில்முனைவோர் இந்த திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu