திருவள்ளூர் அருகே மின் மாற்றியில் பழுது பார்த்தபோது எலக்ட்ரீசியன் பலி

திருவள்ளூர் அருகே மின் மாற்றியில் பழுது பார்த்தபோது எலக்ட்ரீசியன் பலி
X
திருவள்ளூர் அருகே மின் மாற்றியில் பழுது பார்த்தபோது அதனை சரி செய்ய சென்ற எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி பலியானார்.

திருவள்ளூர் அருகே பழுதான மின்மாற்றி மீது ஏரி பழுதை சரி பார்த்துக் கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மின்சாரம் தாக்கி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி ஜார்ஜ் பிரிவில் வசித்து வந்தவர் இன்னாச்சியரா(வயது40) எலக்ட்ரீசியன். கடந்த இரண்டாம் தேதி அன்று அதே பகுதியில் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அதனை சரி செய்ய இன்னாச்சியராவை அழைத்துச் சென்றார்.

இதில் எலக்ட்ரீசியன் மின்மாற்றி மீது ஏரி சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் தூக்கி வீசப்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக திருவள்ளூர் அடுத்த மப்பேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பூந்தமல்லி தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மப்பேடு போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மின்மாற்றியில் ஏதாவது பிரச்சினை என்றால் மின்வாரிய ஊழியர்கள் தான் சரி செய்யவேண்டும். ஆனால் எலக்ட்ரீசியன் இன்னாசியரா அதில் எப்படி ஏறினார் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business