ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.

பழைய ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி முதல் நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டஅரசு மருத்துவ மனை மருத்துவ கல்லூரி அருகே தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு தற்போது தொடர்ந்து மௌனம் காத்து வருவதாகவும்,இதனால் அரசு ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளாதாவும், எனவே தமிழக அரசு தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் ஒற்றை கோரிக்கையான புதிய ஓய்வூதியத்‌ திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தை அமல்படுத்த வேண்டும்‌ எனும்‌ ஒற்றைக்‌ கோரிக்ககயை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாநில மகளிர் பிரிவு செயலாளர் சுபாஷிணி, பேசியபோது தமிழக அரசு எங்களின் ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் பிரிவு செயலாளர் - தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.சுபாஷிணி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் மாவட்ட பொருளாளர் குமார்,திருவள்ளூர் கல்வி மாவட்ட தலைவர் மகேஷ்,அமைப்பு செயலாளர் வேணி, அரசு உதவி பெறும் பள்ளி செயலாளர் மீரா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி