புரட்சி பாரதத்திற்கு சீட்டு இல்லை, அதிமுகவுடன் கூட்டணி நீடிக்குமோ?

X
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் ஜெகன் மூர்த்தி
By - Saikiran, Reporter |23 March 2024 10:15 AM IST
மக்களவை தேர்தலில் சீட்டு கொடுக்காததால் அதிமுகவுடன் கூட்டணி குறித்து இரண்டு நாட்கள் தெரிவிக்கப்படும் என புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி கூறினார்
நாடாளுமன்றத் தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுகவில் சீட் கொடுக்காததன் எதிரொலி யாக அதிமுகவுடனான கூட்டணி தொடருமா என இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் புரட்சி பாரதம் கட்சி தனித்து போட்டியிடாதது என்றும் அதன் தலைவர் ஜெகன் மூர்த்தி கூறியுள்ளார்
நாடாளுமன்றத் தேர்தல் 2024 வருகை ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி அமைப்பது வேட்பாளர்களை அறிவிப்பது போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி கே.வி குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுக சார்பில் தொகுதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அதிமுக சார்பில் புரட்சி பாரதம் கட்சிக்கு சீட்டு ஒதுக்காததால் இன்று திருவள்ளூர் அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் உள்ள அவரது அலுவலக வளாகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிமுகவுடனான கூட்டணியில் இடம் ஒதுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அதிமுகவுடன் ஆன கூட்டணி மேலும் தொடருமா என்பது குறித்து இரண்டொரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்றும், புரட்சி பாரதம் கட்சி சார்பில் தனித்து போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமையுமா என கேட்டதற்கு நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu