/* */

ஆறு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டையில் ஆறு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஆறு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்
X

ஊத்துக்கோட்டையில் ஆறு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினர்.

திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் முதல் சித்தூர் வரை அமைய உள்ள 6 சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஊத்துக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள், எஸ்டிபிஐ, தந்தை பெரியார் திராவிடர்கழகம், மக்கள் அதிகாரம் போன்ற பல்வேறு கட்சிகள் இணைந்து விஏஒ அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தை கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மு.வ. சித்தார்த்தன் தலைமை தாங்கினார். எஸ்டிபிஐ மேற்கு மாவட்ட செயலாளர் மஸ்தான், விசிக கும்மிடிபூண்டி தொகுதி செயலாளர் வக்கில் ஜீவா, ரமேஷ், ஒன்றிய செயலாளர் அறிவு செல்வன், நகர பொருளாளர் ஜெபா, விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் பெரியசாமி, செஞ்சிறுத்தை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரவன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் நாகராசன், மரம் பத்மநாபன், முகம்மது சலீம், சுந்தரமூர்த்தி, மணி, மணிவளவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியில் தமிழர் விடுதலை இயக்கத்தை சேர்ந்த ஆனந்தன் நன்றி கூறினார்.

Updated On: 27 May 2023 3:30 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 2. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 3. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி
 4. தொழில்நுட்பம்
  கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை 'ருத்ரம்-II: இந்தியா வெற்றிகரமாக சோதித்த...
 5. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 6. ஈரோடு
  பெருந்துறை அருகே பதுக்கி வைத்திருந்த 150 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவர்...
 7. நாமக்கல்
  நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர் சரிவில் இருந்து மீண்டது
 8. ஈரோடு
  ஈரோட்டில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! போக்சோவில் கைதான ஆட்டோ
 9. ஈரோடு
  ரூ.35 ஆயிரம் லஞ்சம்: சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட...
 10. தமிழ்நாடு
  தென்னகத்தை ஆளப்போகும் ராமேஸ்வரம் கஃபே..