புதிய ரேஷன் கடை கட்டித்தர மக்கள் கோரிக்கை!

புதிய ரேஷன் கடை கட்டித்தர மக்கள் கோரிக்கை!
X

இடியும் நிலையில் பாழடைந்து கிடக்கும் நியாய விலைக் கடை

நியாய விலைக் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் ஆபத்தான நிலையில் உள்ள நியாய விலை கடை கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டு தர கிராம மக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில், சுமார் 4000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, குழந்தைகள் அங்கன்வாடி மையம், நூலக கட்டிடம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இதே வளாகத்தில் கடந்த 2001.ஆம் நிதி ஆண்டில் கட்டப்பட்ட நியாய விலை கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. 20 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்து மேற்கூரை கட்டிடத்தில் பல்வேறு பகுதிகளில் விரிசலும் சிமெண்ட் பூசுகள் உதிர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் மாறியது. மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, என்னை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மழையில் நனைந்து வீணாகப் போகிறது.

இதனையடுத்து, இந்த கட்டிடம் மூடப்பட்டு அருகில் உள்ள இ சேவை மையத்தில் தற்போது தற்காலிகமாக நியாய விலை கடை இயங்கி வருகிறது. எனவே இந்த பழுதடைந்த நியாய விலை கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா