மது போதையில் பிரச்சினை: ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு

மது போதையில் பிரச்சினை: ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு
X
மது போதையில் ஏற்பட்ட பிரச்சினையால் ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (25) இவர் வேப்பம்பட்டு பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.நேற்றைய தினம் தனது நண்பர் சூப்பு அருண் என்பவரை பார்ப்பதற்காக திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூருக்கு சென்றுள்ளார்.

அப்போது தனது நண்பர்களான சூப்பு அருண், பாய் தினேஷ் , பகவதி, அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ( எ) பபுல் ஆகியோருடன் இணைந்து கடம்புத்தூர் மாதா கோவில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தின் பின்புறம் உள்ள முட் புதரில் அமர்ந்து மதுபானம் அருந்தியுள்ளார்.

அப்போது அரவிந்தனிடம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்ற பபுல் நான் யார் தெரியுமா என கேட்டுள்ளார். அதற்கு அவர் தெரியாது என அரவிந்தன் பதில் கூறியுள்ளார்.

கடம்பத்தூர் அடுத்த ஏகாட்டூரில் உள்ள குயில் குப்பம் பகுதியைச் சேர்ந்த கொலை மற்றும் அடிதடி நான்கு வழக்கில் தொடர்புடைய சுனால் யார் தெரியுமா என கேட்டுள்ளார். தேவையில்லாமல் கொலை வழக்கில் சிறை சென்று வந்தவர் என அவர் அரவிந்தன் பதில் கூறியுள்ளார்.

அப்போது அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்ற பபுல் சுனால் பற்றி பேசுவியா உன்ன இங்கே அடித்துக் கொலை செய்து விடுவேன் என கூறிக்கொண்டே அவருடைய நண்பர்கள் அரவிந்தினகை கால் பிடிக்க தான் பின்னால் வைத்திருந்த பட்டா கத்தியை கொண்டுபபுல் அரவிந்தனை தலையில் மூன்று இடத்தில் சரமாரியாக வெட்டி உள்ளார்.

இதில் வெட்டு காயமடைந்த அரவிந்தன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 16 தையல்கள் தலையில் போடப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தவர் மருத்துவமனையில் இருந்து மாயமாகியுள்ளார்.

இது தொடர்பாக கடம்பத்தூர் போலீசார் ஆட்டோ ஓட்டுநனரை வெட்டிய சூப்பு அருண், அரக்கோணம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்ற பபுல் பகவதி பாய், தினேஷ் ஆகியோர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ai solutions for small business