திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்

திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்
X

திமுக அரசை கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 

போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் திருவள்ளூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது, அதனை திமுக அரசு தடுக்க தவறியதாக கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

சமீப காலமாக தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள் அதிகளவில் புழங்குவதாகவும், இந்த போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறி ஆகி விடுவதாகவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அதிக அளவில் போதை பொருட்கள் பயன்படுத்துவதாகவும், ஆளும் திமுக அரசு அவற்றை தடுக்க தவறியதாகவும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏற்கனவே கண்டன ஆர்பாட்டம் நடத்திய நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உழவர் சந்தை முதல் ஆயில் மில் வரை அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் . திருவேலாங்காடு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சுதாகர், திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமிஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare