13 ஆண்டுகளுக்கு பின் மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுடன் அமைச்சர் காந்தி.
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திட்டக்குழு உறுப்பினர்கள் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு தலைவரும் மாவட்ட ஊராட்சித் தலைவருமான கே.வி.ஜி உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.இதில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட திட்ட குழு உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் காந்தி, 13.ஆண்டுகளுக்கு பின் மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும்,திட்டக்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செயல்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட வேண்டும் எனவும், தமிழ்நாட்டிலேயே சிறப்பாக செயல்பட்ட மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் விளங்க அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் எனவும், இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக மிகச் சிறப்பாக ஓய்வின்றி பணியாற்றி வருவதாகவும் மக்களுக்காக ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செய்து வருவதாகவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu