ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட அ.தி.மு.க. வினர் முடிவு

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட அ.தி.மு.க. வினர் முடிவு
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்.

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட அ.தி.மு.க. வினர் முடிவு செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி நகராட்சியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் அப்துல் ரஹீம் வழிகாட்டுதலின் பேரில் நிர்வாகிகள் கே. சுல்தான், பிரகாஷ் ஹேமந்த் ,தங்க குணசேகரன், மதுரை ஆறுமுகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிசை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ஆவடி மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எவ்வித வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை எனவும் மாநகராட்சியில் சாலை வசதிகள் குடிநீர் வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் எனவும் கூறி இருந்தனர். மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான அரசு கட்டிடத்தை அமைச்சரின் மகன் கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார் எனவும் கடந்த ஜூன் 24ஆம் தேதி தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு கூட்டத்தை அந்த கட்டடத்தில் நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகி கே. சுல்தான் செய்தியாளர்களிடம் கூறும்போது ஆவடி மாநகராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர் அரசு கட்டிடத்தை கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். மேலும் அமைச்சர் தொகுதியாக இருந்தும் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வரும் 11ஆம் தேதி ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!