தனியார் மருத்துவக் கல்லூரி விளையாட்டு போட்டி.
மாணவர்களுடன் விளையாடிய நடிகர் யோகிபாபு
திருவள்ளூர் அருகே மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்களுடன் பேஸ்கட்பால், கிரிக்கெட் விளையாடி மாணவர்களை யோகி பாபு மகிழ்வித்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிகள் கைகளில் செல்போனுடன் யோகிபாபுவை முற்றுகையிட்டு செல்ஃபி. ஜாதி மதங்களை மறந்து பாகுபாடு இன்றி அனைவரிடமும் நட்பாக பழக வேண்டும் எனவும் யோகி பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் அடுத்த பாண்டூர் பகுதியில் பிரபல இந்திரா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது, இந்த கல்லூரியில் கடந்த ஒரு வார காலமாக ஸ்போர்ட்ஸ் டே நடைபெற்று வந்தது
இறுதி நாளான நேற்று நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவி, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா கல்லூரியின் டீன் இந்திரா தலைமையில் நடைபெற்றது.
இந்த ஸ்போர்ட்ஸ் டே நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகரும் தற்போதைய திரைப்பட ஹீரோவாக நடித்து வரும் யோகி பாபு கலந்து கொண்டார். மேலும் மேல இசை வாக்கியத்துடன் சுமார் 50 மீட்டர் தூரம் பேட்டரி வாகனத்தில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் உடன் பயணித்து மாணவர்களுக்கான பேஸ்கெட் பால் போட்டியை டாஸ் போட்டு போட்டிகளை தொடங்கி வைத்ததுடன் மாணவர்களுடன் பேஸ்கட்பால் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
அப்போது யோகி பாபு தூக்கி போட்ட பால் சரியாக கூடையில் விழுந்ததால் மாணவர்கள் உற்சாகமாக கைதட்டினர். யோகி பாபு கிரிக்கெட் விளையாடி மருத்துவ மாணவர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது மாணவர்கள் முதலில் இரண்டு பந்துகளை அகல பந்தாக வீசியதால் அலட்சியமாக பேட்டை தூக்கிய யோகி பாபு சரியாக வீசிய பந்தை தூக்கி அடித்தார்.
பின்னர் மேடையில் பேசிய யோகி பாபு மாநில அளவிலான புட்பால் மற்றும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி தன் உள்ளதாகவும், தொடக்கத்தில் சினிமா நடிகராக மாறுவதற்காக மிகவும் சிரமப்பட்ட நிலையில் பல தயாரிப்பாளர்கள் தன்னை உதாசீனப்படுத்தினாலும் முயற்சி விடாமல் கடினமாக நம்பிக்கையுடன் சுற்றி வாய்ப்பை சம்பாதித்து தற்பொழுது ஓரளவிற்கு நடிகராக மாறி உள்ளேன் எனவும்,கூறினார்
எனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் தயாரிப்பாளர் சுந்தர் சி எனவும் பலமுறை பதிவு செய்தார். மேலும் மாணவர்களாகிய நீங்கள் கடினமாக உழைத்து படித்து வாழ்க்கையில் உயரத்திற்கு செல்ல வேண்டும், தங்களுக்காக உழைத்து மேகுவர்த்தி போல் கரைந்து தாங்களுக்கு வெளிச்சம் காட்டிய தாய் தந்தையர்களுக்கு நீங்கள் சார்ந்த பகுதிக்கு இந்த நாட்டிற்கு பெருமை தேடி தர வேண்டும் எனவும், பொதுமக்களும் மாணவர்களும் ஜாதி மதங்களை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும் ஜாதி மதங்களை கடந்து அனைவரிடமும் நல்ல நட்பாக பழகிட வேண்டும் எனவும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை யோகி பாபு வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu