நடிகர் விஜய் கட்சி துவக்கம்; பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய ரசிகர்கள்

நடிகர் விஜய் கட்சி துவக்கம்;  பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய ரசிகர்கள்
X

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய விஜய் ரசிகர்கள். 

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்று பெயரில் கட்சி தொடங்கியதை முன்னிட்டு கடம்பத்தூர் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டப்பட்டது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதை தொடர்ந்து கடம்பத்தூர் ஒன்றிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்தனர். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

திரைப்பட நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், அடுத்தகடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் எம் பி.மகேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர் விஜயகுமார் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் டாக்டர் எம்டி. மணி, முன்னாள் ஒன்றிய பொறுப்பாளர் கார்த்திக், ஆகியோர் கலந்து கொண்டு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது சமீர், இன்பகுமார், ராஜ்சுனித், அஜித், விஜய்பீட்டர், கோகுல், தென்னவன், சரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story