திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் விபத்து: போக்குவரத்து பாதிப்பு
கண்டெய்னர் லாரி திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் எம் சாண்ட் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளானது
திருவள்ளூர் மாவட்டம் வெங்கள் பகுதியில் இருந்து செருப்பு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் இருந்து செருப்புகளை ஏற்றிக்கொண்டு, வேலூர் திருவண்ணாமலை பகுதிகளுக்கு திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்ற கண்டெய்னர் லாரி திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் தொடுகாடு அருகே வரும்போது எதிரே எம் சாண்ட் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் காலணிகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபதுக்குள்ளானது.
இதில் எம்.சாண்ட் ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் தப்பி ஓடிய நிலையில், காலணிகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் அதிருஷ்டவசமாக சிறு காயங்களோடு உயிர் தப்பினார். மேலும் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனடியாக கிரேன் மூலம் சாலையில் கிடந்த இரண்டு லாரிகளை சாலையின் ஓரமாக அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu