திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடு

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாடு
X

திருவள்ளூர் வைத்ய வீரராகவபெருமாள் கோவிலில் பக்தர்கள் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திருவள்ளூரில் பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் வைணவத்தலமான வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை தினத்தன்று பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் பக்தர்கள் அதிகளவில் வழிபடுவது வழக்கம். இந்த அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடைக்கும என்பதாலும், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதால் திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வைத்திய வீரராகவர் கோயில் அருகில் உள்ள குளக்கரையில் முன்னோர்களுக்கு ஆயிரக் கணக்கான பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

நோய்கள் தீர்க்கவும், தடைபட்ட திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வீரராகவப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் இரவு முழுவதும் தங்கியிருந்து அதிகாலையில் எழுந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து நீண்ட வரிசையில் நின்று வீரராகவப்பெருமாள் தரிசித்து வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!