செங்குன்றம் அருகே தனியார் நிறுவனத்தில் சுத்தியலால் அடித்து இளைஞர் கொலை
செங்குன்றம் அருகே நொறுக்கு தீனி நிறுவனத்தில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் சுத்தியலால் அடித்து மண்டை உடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்டவர் யார் என அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நொறுக்கு தீனி தயாரிக்கும் தயாரிக்கும் சிறு சிறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள நொறுக்கு தீனி நிறுவனத்தில் தலையில் ரத்த காயங்களுடன் ஆண் ஒருவரது சடலம் கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டறைக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்குன்றம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் சுத்தியலால் தலையில் அடித்து மண்டை உடைந்து அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சடலத்தை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு சென்றுவிட்டதாகவும், தென்காசியை சேர்ந்த ஐயப்பன் என்ற தொழிலாளி தங்கியிருந்தது தெரிய வந்ததுள்ளது. முதற்கட்டமாக ஐயப்பன் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது உறவினர்கள் கூறிய அடையாளங்கள் சடலத்தில் இல்லாததால் இறந்தவர் ஐயப்பன் இல்லை எனவும், ஐயப்பன் தலைமறைவானது தெரிய வந்தது.
ஐயப்பன் பிடிபட்ட பிறகே கொலை செய்யப்பட்டது யார், கொலை செய்தது யார், காரணம் என்ன என்பது தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாளில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா அல்லது முன் பகையால் திட்டமிட்டு கொலை நடந்ததா எனவும் செங்குன்றம் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu