திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

டில்லி பாபு நீரில் மூழ்கி உயிரிழந்த தடுப்பணை (கோப்பு படம்).

திருவள்ளூர் அருகே பிஞ்சுவாக்கம் கூவம் ஆற்றில் தடுப்பணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே தடுப்பணை பகுதியில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரு சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சுவாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ஈஸ்வரமூர்த்தி என்பவரின் மகன் டில்லிபாபு(வயது 17).இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் திருவள்ளூர் அருகே மப்பேடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பிஞ்சுவாக்கம் கூவம் ஆற்றில் உள்ள தடுப்பணை தண்ணீர் நிரம்பி வழிந்து பாய்ந்தது.

இந்நிலையில் நேற்று மாலை டில்லிபாபு கிராமத்தில் உள்ள சக நண்பர்களுடன் பிஞ்சுவாக்கம் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக ஆழமான பகுதிக்கு சென்ற டில்லிபாபு நீரில் மூழ்கி காணாமல் போனார். அவர் மேலே வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டதால் உடன் குளிக்கச் சென்ற நண்பர்கள் டில்லி பாவை தேடினர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த டில்லிபாபு

ஆனாலும் அவர் கிடைக்காததால் நீரில் மூழ்கியது குறித்து குடும்பத்தினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரம்பாக்கம் தீயணைப்புத்துறையினர் சுமார் 3.மணி நேர தேடுதலுக்கு பின்னர் டில்லிபாபுவை சடலமாக மீட்டனர்.

மீட்கப்பட்ட டில்லிபாபு உடல் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பிஞ்சுவாக்கம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு