திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிப்பு

திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிப்பு
X

தீயில் கருகி இறந்த ராஜேஸ்வரி.

பெண் மீது பெட்ரோல் ஊற்றியபோது பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீ பட்டு பெண் தீ பற்றி எரியும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.

திருவள்ளூர் காய்கறி மார்க்கெட்டில் பெண் மீது பெட்ரோல் ஊற்றியபோது பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீ பட்டு பெண் தீ பற்றி எரியும் கண்காணிப்பு சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தீ பற்றி எரிந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளுவர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கு பார்வதி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள நிலையில். சுரேஷுக்கு ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் சுரேஷ் காய்கறி கடையை ராஜேஸ்வரி கவனித்து வந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத சுரேஷின் மனைவி பார்வதி கடந்த 9-ஆம் தேதி காலை 8.50 மணியளவில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள திருவள்ளூர் மார்க்கெட் பகுதிக்கு வந்து காய்கறி கடையில் இருந்த ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றிய நிலையில் பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீ பற்றி ராஜேஸ்வரி எரித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


அந்த வீடியோவில் சுரேஷின் மனைவி பார்வதி மற்றும் அவரது உறவினர்கள் ராஜேஸ்வரி இருக்கும் காய்கறி கடைக்கு வேகமாக வருவதும் கேனில் கொண்டு வந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றுவதும் பின்னர் ராஜேஸ்வரிக்கு பின்னால் சுவற்றில் இருந்த சுரேஷின் தந்தையின் படத்தின் முன் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கில் இருந்து தீ பற்றி ராஜேஸ்வரி உடல் முழுவதும் தீ பற்றி ஏரியும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ராஜேஸ்வரி உடல் முழுதும் சுமார் என்பது சதவீத தீக்காயத்துடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக சுரேஷ், சுரேஷின் மனைவி பார்வதி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுரேஷின் மனைவி பார்வதி பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றும்போது பின்னால் இருந்த விளக்கிலிருந்து தீப்பொறி பரவி ராஜேஸ்வரி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!