100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி
X
பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூரில் 100 சதவீத வாக்களிப்பதின் அவசியத்தை குறித்து பெண்கள் கலந்து கொண்ட இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருவள்ளூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.அதனை ஆட்சியர் பிரபு சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் பெண்கள் பங்கேற்ற இரு சக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.அதனை திருவள்ளூர் ஆட்சியர் பிரபு சங்கர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் காமராஜர் சிலை, உழவர் சந்தை, பேருந்து நிலையம், ஈக்காடு வரை நடைபெற்றது.இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது நமது கடமை என்றபதாகைகளை ஏந்தி பொது பொதுமக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் ஊர்வலமாக சென்றனர்.இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!