தந்தை இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிய மாணவன்

தந்தை இறந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதிய மாணவன்
X

தந்தை இறந்த சோகத்திலும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வு எழுதி விட்டு வந்த மாணவன்.

திருவள்ளூர் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் 12-ம் வகுப்பு பொது தேர்வினை எழுதிய மாணவன் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் அருகே தந்தை இறந்த துக்கத்திலும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வினை மாணவர் ஒருவர் எழுதி உள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கைவண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் 53 வயதுடைய விவசாய கூலித் தொழிலாளி மோசஸ். இவர் நேற்றைய தினம் பூண்டி ஏரி பகுதியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளர்.

அதைத் தொடர்ந்து அவர் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த மோசஸ் மகன் சந்தோஷ் பாண்டூர் பகுதியில் உள்ள பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருவதால் அவருக்கான பொதுத்தேர்வுக்கான தேர்வு மையம் திருவள்ளூரில் உள்ள ஞானவித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்தது.

பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் தனது தந்தை இறந்த துக்கத்திலும் இன்று நடைபெற்ற எக்னாமிக்ஸ் (பொருளாதாரம் ) தேர்வை மாணவன் சந்தோஷ் வருகை எழுதியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிருபர்களிடம் பேசிய மாணவன் சந்தோஷ் தன் தந்தை மீன்பிடித்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை காப்பாற்றியதாகவும் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். அவருடைய ஆசைக்காக படித்து வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்வேன் என்றும் மற்றவர்களுக்கு உதாரணமாக எடுத்துக்காட்டாக இருப்பேன் என்று தெரிவித்தார்.

Next Story
ai marketing future