திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அதிகாரிகளிடையே தள்ளுமுள்ளு

திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அதிகாரிகளிடையே தள்ளுமுள்ளு
X
திருவள்ளூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகள் வீட்டாருக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் மகன் ரவி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் சுமார் 32 சென்ட் அதாவது சுமார் 70 லட்சம் மதிப்பிலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மாடி வீடு கட்டி வருகிறார்.

இந்நிலையில் ஆக்க இரும்புகளை அகற்றக்கோரி கிராமத்தினர் கொடுத்த மனுவின் அடிப்படையில் மனுவை ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும் படி திருவள்ளூர் வட்டாட்சியர் சுரேஷ்குமாருக்கு கொடுத்த உத்தரவின் பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்க துணை வட்டாட்சியர் ஆதிலட்சுமி வருவாய் ஆய்வாளர் இளமதி கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஜெசிப்புடன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டனர்.

அப்போது பாலசுப்ரமணியனின் குடும்பத்தார் ஜேசிபி முன் படுத்தும் இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து ஊற்றிக் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் திருவள்ளூர் வட்டாட்சியர் சுரேஷ்குமார் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

முன்னாள் வட்டாட்சியர் ஆக இருந்து ஓய்வு பெற்ற ஒருவரின் குடும்பத்தினர் 30 ஏக்கருக்கும் மேல் சொத்து வைத்துள்ள ஒரு குடும்பத்தினர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது வெட்கக்கேடானது என திருவள்ளூர் வட்டாட்சியர் அந்த குடும்பத்தினரிடம் தெரிவித்தும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் பாலசுப்ரமணியன் குடும்பத்தினருக்கும் போலீசா இருக்கும் இடையே தள்ளு முள்ளு காரணத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா