ஊத்துக்கோட்டை அருகே குவாரியில் இருந்து வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே குவாரியில் இருந்து வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டம்
X

லாரிகளை சிறைப்பிடித்த பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர்.

ஊத்துக்கோட்டை கிராவல் குவாரியிலிருந்து இரவு நேரங்களில் வந்த லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

வெங்கல் கிராமத்தில் இரவு நேரத்தில் கிராவல் ஏற்றி வந்த லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்,பூண்டி ஒன்றியம், போந்தவாக்கம் கிராமத்தில் கிராவல் குவாரி ஒன்று இயங்குகிறது.இங்கு இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கிராவல் ஏற்றிக்கொண்டு சிதஞ்சேரி வெங்கல் நெடுஞ்சாலை வழியாக செங்குன்றம், சென்னை,திருவெற்றியூர், திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், காலை முதல் மாலை வரை என ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் லாரிகளில் கிராவல் ஏற்றிச் செல்ல வேண்டும் என்பது அரசு விதி ஆகும்.ஆனால்,இரவு-பகலாக லாரிகளில் கிராவல்ஸ் ஏற்றி செல்வதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து வருவாய் துறை, கனிமவளத்துறை, காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வெங்கல் கிராம மக்கள் புகார் கூறியும் பயன் இல்லையாம். இந்நிலையில்,நேற்று இரவு கிராவல் ஏற்றிச் சென்ற ஏராளமான லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சீத்தஞ்சேரி-வெங்கல் நெடுஞ்சாலையில் வெங்கல் கிராமத்தில் ஏராளமான லாரிகள் அணிவகுத்து நின்றது.போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை.சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை தாசில்தார் வந்து உரிய பதிலளித்தால் மட்டுமே லாரிகளை விடுவிப்போம் என பொதுமக்கள் கூறினர். இது குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.இதனை ஏற்று பொதுமக்கள் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.இதனால் நேற்று இரவு இப்பகுதியில் பதட்டமும்,பரபரப்பும் நிலவியது.

Tags

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?