திருவள்ளூர் அருகே லாரி மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே  லாரி மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழப்பு
X
திருவள்ளூர் அருகே லாரி மோதி தனியார் தொழிற்சாலை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற தனியார் தொழிற்சாலை ஊழியர் மீது லாரி மோதிய விபத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்குட்பட்ட பாதிரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி என்பவரின் மகன் பானுபிரகாஷ்.( 38). இவர் ஓரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் வழியாக சென்ற போது அந்த லாரியை முந்திக்கொண்டு பானுபிரகாஷ் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, பானுபிரகாஷ் மீது லாரி மோதியதில் ஹெல்மெட் அணிந்திருந்தும், தலைமீது லாரி டயர் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த மணவாளநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பானுபிரகாஷின் உடலை மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்லவேண்டும் என அறிவுரைகள் வழங்கபபட்டு வருகிறது. இதன் காரணமாக தற்போது மக்களிடம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பானு பிரகாசும் தலைக்கவசம் அணிந்த படி தான் வாகனம் ஓட்டி உள்ளார். ஆனால் அவர் லாரியை முந்திச்செல்ல முயன்றதில் கவனக்குறைவாக இருந்ததால் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா