திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த நபர் கைது

திருவள்ளூர் அருகே வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக வீட்டில் நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 100கிலோ வெடி மருந்து மற்றும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் அருகே பட்டரை கிராமத்தில் ஒரு வீட்டில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு பட்டாசுகள் தயாரிப்பதாக திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் மதியழகன், மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா ஆகியோர் அந்த பட்டறை பகுதியில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது சுந்தரராஜன் மகன் சசிக்குமார் (41) என்பவரின் வீட்டில் பட்டாசுகள், 25 கிலோ வெடி மருந்து மற்றும் பட்டாசு தயாரிக்க கலக்கப்படும் மூலப் பொருட்கள் என 100 கிலோ வெடி மருந்து பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பட்டாசு மற்றும் வெடி மருந்து பொருட்களை பறிமுதல் செய்து. இதுசம்பந்தமாக சசிகுமாரிடம் மேற்கொண்ட விசாரணையில் சசிகுமார் அரசு உரிமம் பெறாமல் பட்டாசு தயாரித்து வந்ததும் அவர் வெளியே இருந்து பட்டாசு தயாரிக்க மூல பொருட்களை வாங்கி வந்து வீட்டில் தயார் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளான மணவாளநகர், மேல்நல்லாத்தூர், பட்டறை உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் பட்டாசு தயாரிப்பது அதிகரித்துவருகிறது. இதனால் விபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட அபாயம் உள்ளதால் இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu