சோழவரம் அருகே ஒரு மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்

குழந்தை வீசப்பட்ட கிணற்றங்கரையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
சோழவரம் அருகே 1 மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து காணாமல் போனதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார்.குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை கொல்லப்பட்ட பரிதாப சம்பவம் நடந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (25). இவர் சத்யா (22) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்பு தான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது நேற்று பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. ரமேஷ் கோவிலில் தீச்சட்டி எடுக்க சென்ற போது குழந்தையை உறவினர்களிடம் கொடுத்து விட்டு சத்யாவும் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டில் இருந்த போது கழிவறைக்கு சென்று விட்டு மீண்டும் வந்து பார்த்த போது தம்முடைய குழந்தையை காணவில்லை என அலறி துடித்துள்ளார்.
உறவினர்கள், மற்றும் காவல்துறை தேடிய போது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சோழவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்த போது சத்யா குழந்தையை மறைத்து எடுத்து கொண்டு கிணற்றில் வீசியது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில் குறை பிரசவத்தில் குறைந்த எடையில் குழந்தை இருந்ததால் வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ எனவும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதாலும், தன்னை விட குழந்தையிடம் ரமேஷ் பாசத்தை காட்ட தொடங்கியதாலும் கிணற்றில் வீசி கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து கிணற்றில் வீசி குழந்தையை கொலை செய்து நடமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu