ஆந்திராவில் இருந்து வாழை இலை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ஆந்திராவில் இருந்து வாழை இலை ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
X
திருவள்ளூர் அருகே ஆந்திராவிலிருந்து வாழை இலை வாழைப்பூ ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

ஆந்திராவில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வாழை இலை,வாழைப்பூ ஏற்றி வந்த லாரி திருவள்ளூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

ஆந்திர மாநிலம் கடப்பா காவேலுபேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மகேஷ், கணேஷ் ஆகியோர் தங்களின் நிலத்தில் பயிரிட்டுள்ள வாழை மரங்களிலிருந்து வாழை இலை,வாழைப்பூ ஆகியவற்றை சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனை செய்வதற்காக லாரியில் ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சுமார் 11 மணியளவில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் அந்த லாரி சென்ற போது ஓட்டுநர் ஸ்ரீ ஹரியின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழந்ததில் அடியில் சிக்கி கொண்ட டிரைவர் மற்றும் கிளீனர் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்தனர்.

அவர்கள் லாரியின் அடியில் சிக்கி இருந்த ஓட்டுனர் ஹரி மற்றும் லாரியில் பயணம் செய்த விவசாயிகள் மகேஷ், கணேஷ்,ஆகியோரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,

மேலும் இச்ம்பவம் குறித்து தகவல் அறிந்து திருவள்ளூர் தாலுகா போலீசார் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் உடனடியாக வந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததால் விபத்தில் சிக்கிய மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!