திருவள்ளூர் அருகே சூப் சாப்பிட சென்ற தொழிலாளி மாரடைப்பால் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே சூப் சாப்பிட சென்ற தொழிலாளி மாரடைப்பால் உயிரிழப்பு
X

உயிரிழந்த தொழிலாளியின் உடல் ஆம்புலன்சில்  ஏற்றப்பட்டது.

திருவள்ளூர் அருகே நண்பர்களுடன் சூப் சாப்பிட சென்ற கூலி தொழிலாளி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளுர் அருகே சூப் சாப்பிட காத்திருந்த தனியார் நிறுவன தொழிலாளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம், முகந்தனூர் பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சரவணன் (வயது49) இவர் திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் தங்கி தனியார் அட்டை கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

நேற்றைய தினம் சரவணன் வேலை முடித்துக் கொண்டு தான் தங்கி இருக்கும் இடத்திலிருந்து தனது நண்பர்களுடன் பாப்பரம்பாக்கம் பகுதியில் உள்ள சூப் கடைக்கு சூப் சாப்பிட சென்றுள்ளார்.

அப்போது சரவணனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அமர்ந்தபடியே கீழே விழுந்து மயங்கி உள்ளார்.

அதைத் தொடர்ந்து அவருடைய நண்பர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது அவர்கள் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர் நண்பர்களுடன் சூப்பு சாப்பிட வந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
வனத் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியரின் உற்சாக பாராட்டு!