திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உடல் கருகி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி உடல் கருகி உயிரிழப்பு
X

மாதிரி படம் 

திருவள்ளூர் அருகே கடையின் மேல் கூரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், குப்பம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது-57). இவர் அப்பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் திருப்பாச்சூரிலிருந்து ஆந்திர மாநிலம் அலமேலு மங்காபுரம் வரை நான்கு வழி சாலை பணிக்காக சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குப்பம்சத்திரம் பகுதியில் ஓரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து பாஸ்கர் தனது ஹார்டுவேர்ஸ் கடையின் மேலே போடப்பட்டிருந்த மேற்கூரை சீட்டுகளை அகற்ற முடிவு செய்தார்.இதற்காக அவர் திருவள்ளூர் அடுத்த விடையூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான சென்ராயன் (வயது-38). கடையின் மீது போடப்பட்டிருந்த ஓடுகள் மற்றும் சீட்டுகளை அகற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது மேலே சென்ற மின்சார ஒயர் அவர் மீது பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்து போனார்.இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த கூலி தொழிலாளி சென்ராயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே கடையின் மீது இருந்த ஓடு மற்றும் சீட்டுகளை அகற்றிய போது கூலி தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குப்பம்மாள் சத்திரம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!