திருவள்ளூர் அருகே பூட்டிய வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

தீ விபத்தில் இறந்த லவ்பேர்ட்ஸ் பறவைகள்.
திருவள்ளூர் அருகே வீட்டில் மின்கசிவு காரணமாக குளிர்சாதன பெட்டி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஆசையாக வளர்க்கப்பட்ட 5 லவ் பேர்ட்ஸ் பறவைகள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பத்மாவதி நகரை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் இரண்டு ஆண்டுகளாக மேலாக குடும்பத்துடன் வசித்து வருகிறார் அவர் வழக்கமாக காலை வீட்டிலிருந்து கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக ஆவடியில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அதேபோன்று அவருடைய மனைவி லட்சுமி மகன்கள் இருவரையும் திருவள்ளூரில் உள்ள பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு வீட்டை பூட்டி கொண்டு திருவள்ளூர் பகுதியில் தான் வேலை செய்யும் தனியார் ஜுவல்லரி கடைக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் வீட்டில் உள்பகுதியில் இருந்து காலை 9 மணியளவில் அதிக கரும் புகை வெளியேறியதை அருகில் குடியிருப்பவர் செந்தில்குமாருக்கு போன் மூலம் தகவல் அளித்துள்ளார்.
அது தொடர்பாக தீயணைப்பு துறைக்கும் அவர் உடனடியாக தகவல் அளித்ததால் திருவள்ளூரில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் வீட்டில் புகை மூட்டத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து மின்சார ஒயரை துண்டித்து பிரிட்ஜ் வெடித்து எரிந்து கொண்டிருந்ததை தண்ணீர் பீச்சி அடித்து தீயை அனைத்தனர்.
தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்களான டிவி, செல் ஃபேன், வாஷிங் மெஷின் போன்ற பொருட்கள் எரிந்து நாசமாகியது. இந்த தீ விபத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக கூண்டுக்குள் அடைத்து ஆசையாக வளர்த்து வந்த 5 லவ் பேர்ட்ஸ் பறவைகள் புகை மூட்டத்தால் மூச்சு திணறி உயிரிழந்தன.
அதேபோன்று அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த வெள்ளை நிற சேவல் மட்டும் மேல் மாடியில் பாதுகாக்கப்பட்டதால் உயிர் தப்பியது. தீ விபத்தால் ஆசையாக வீட்டில் வளர்த்த ஐந்து லவ் பேர்ட்ஸ் பறவைகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu