மஞ்சாக்கரணையில் பஞ்சு கிடங்கில் தீ விபத்து

மஞ்சாக்கரணையில் பஞ்சு கிடங்கில் தீ விபத்து
X

மஞ்சாக்கரணையில் பஞ்சு கிடங்கில் தீப்பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். 

பெரியபாளையம் அருகே தெர்மாகோல், பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

பெரியபாளையம் அருகே பஞ்சாங்கரணையில் பஞ்சு சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சென்னை-திருப்பதி சாலை இடையே உள்ள மஞ்சங்கரணையில் கிராமப் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தெர்மாகோல் மற்றும் பஞ்சு சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு மின்னணு சாதன பொருட்களை பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படும் தெர்மாகோல் மற்றும் பஞ்சு ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.


இந்த கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு மளமளவென தீப்பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அலறியடித்து ஓட்டம்பிடித்த ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி, செங்குன்றம், சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரையும், ரசாயன கலந்த நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


எளிதில் தீப்பற்ற கூடிய தெர்மாகோல்,பஞ்சு ஆகியவை என்பதால் தீ கொழுந்து விட்டு எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு போராடி தீயை அணைத்தனர். தீவிபத்து காரணமாக வானுயர கரும்புகை எழுந்ததால் பரபரப்பு நிலவியது. இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
ai in future agriculture