உணவை மாற்றிக் கொண்டுவந்த டெலிவரி நிறுவனத்திற்கு ரூ.15000 அபராதம்
வாடிக்கையாளர் ஆர்டர் செய்த தோசை, ஊத்தப்பம் இல்லாத சோமாட்டோ உணவு டெலிவரி செய்த நிறுவனத்தின் மீது 15 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியை சேர்ந்த ஆனந்த் சேகர் என்பவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சொமாட்டோ டெலிவரி செயலியில் அக்ஷயா பவன் உணவகத்தில் ஊத்தாப்பம், தோசை உட்பட 498 ரூபாய்க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்பவரும் உணவு பார்சலை கொண்டு வந்து கொடுத்துள்ளார். ஆனால் சாப்பிடுவதற்காக பார்சலை பிரித்து பார்த்த போது அவர் ஆர்டர் செய்த மற்ற உணவுகள் இருந்த நிலையில் ஊத்தாப்பம் ,தோசை இல்லாமல் இருந்துள்ளது.
ஆசைப்பட்டு ஆர்டர் செய்த தோசையும், ஊத்தாப்பமும் கிடைக்காமல் போனதே என்ற ஆதங்கத்தில் ஆனந்த் சேகர் உடனடியாக சொமாட்டோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஆனால் அவரிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர் திருவள்ளூர் நுகர்வோர் குறைத்தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
விசாரணையின்போது சொமாட்டோ நிறுவனம் தரப்பில் வாதிடும்போது உணவகத்துக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே இடைத்தரகர் போல் செயல்படுவதாகவும், ஆர்டர் செய்த உணவை சம்பந்தப்பட்ட ஓட்டலில் இருந்து வாங்கி கொடுப்பதோடு எங்கள் வேலை முடிந்து விடுவதாகவும்,பார்சல் போட்டு தருவது ஹோட்டல் நிர்வாகம் தான். அதற்குள் இருக்கும் உணவுகளின் தரம் சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் நாங்கள் பார்க்க முடியாது. இந்த வழக்கில் ஹோட்டல் நிர்வாகத்தை ஒரு தரப்பாக சேர்த்திருக்க வேண்டும் என வாதிட்டனர்.
இதை ஏற்க திருவள்ளூர் நுகர்வோர் கோர்ட் தலைவர் லதா மகேஸ்வரி மறுத்துவிட்டார். வாடிக்கையாளரிடமிருந்து சேவை கட்டணமாக ரூ.73 வசூலித்து இருக்கிறீர்கள். எனவே சேவை சரியாக வழங்கப்படுகிறதா என்பதை சரி செய்யும் பொறுப்பு சொமாட்டோ நிறுவனத்திற்கு உண்டு என்றும், எனவே நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வாடிக்கையாளர் செய்ய முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. எனவே மனுதாரரின் ஒப்பந்தம் சொமாட்டோ நிறுவனத்துடன் நேரடியாக இருக்கிறது.
அதற்கான சேவை கட்டணத்தையும் வழங்கி இருக்கிறார். எனவே உணவகத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க முடியாது. எனவே உணவுக்காக செலவழிக்கப் பட்ட ரூ.498.ஐ திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும் மனதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் வேதனைக்காக ரூ. 10 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுக்காக ரூ. 5 ஆயிரம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu