பெரியபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர், மாணவி உயிரிழப்பு

பெரியபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர், மாணவி உயிரிழப்பு
X

சாலை விபத்தில் உயிரிழந்த கார்த்திக் மற்றும் ஜெயலலிதா.

பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவரும் மாணவியும் உயிரிழந்தனர்.

பெரியபாளையம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு வி. எம். ஏ. தெருவை சேர்ந்தவர் ஜெயலலிதா, (வயது 19). இவர் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல் சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் (வயது 21) சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கார்த்திக் மற்றும் ஜெயலலிதா இருவரும் நண்பர்கள் ஆவார்கள்.

இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு நண்பர்களுடன் அன்று பொழுதை கழித்து விட்டு பின்னர் இருவரும் மாலை அவர்களது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டனர். இருசக்கர வாகனத்தை ஜெயலலிதா ஓட்டினார். பின்னால் கார்த்திக் அமர்ந்திருந்தார். அசுர வேகத்தில் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் பெரியபாளையம் அருகே தண்டலம் சாலையில் சிமெண்ட் கற்களை ஏற்றுக்கொண்டு நின்றிருந்த டிராக்டர் பின்புறத்தில் பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில் மாணவர்கள் இருவரும் டிராக்டர் பின்புறத்தில் சிக்கிக் கொண்டு உடல் நசுங்கி கார்த்திக் மற்றும் ஜெயலலிதா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி,துடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நண்பரை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது நடந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!