எல்லாபுரம் அருகே செங்கரை கிராமத்தில் மூடியே இருக்கும் நூலக கட்டிடம்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் அருகே மூடப்பட்ட நிலையில் உள்ள நூலக கட்டிடம்.
செங்கரை கிராமத்தில் 2. வருடங்களாக மூடப்பட்டு இருக்கும் நூலக கட்டிடத்தை திறக்க வேண்டும் என கிராம மக்கள் படித்த இளைஞர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் செங்கரை கிராமத்தில் படித்த இளைஞர்கள், மாணவ - மாணவிகள், படித்த முதியவர்கள், விவசாயிகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் இங்கு பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு திறனை வளர்த்துக்கொள்ள கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது .
இக்கிராமத்தை சேர்ந்த பலர் பயன்படுத்தி வந்தனர்.இதில் ஒரு நூலகரும் பணியாற்றி வந்தார்.சேதமடைந்து காணப்பட்ட இந்த நூலக கட்டிடத்தை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சீரமைத்தனர் ஆனால் அன்று முதல் இந்த நூலகம் பூட்டியே கிடக்கிறது, இதனால் நூலகத்தில் உள்ள புத்தகம் வீணாகி கரையானுக்கு இரையாகும் நிலை ஏற்படும் .நூலகம் மூடியே கிடப்பதால் மாணவர்கள், முதியோர்களும் அவதிப்படுகிறாகள் எனவே செயல்படாத நூலகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அப் பகுதி மக்கள் கூறியதாவது : -
செங்கரை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2 வருடமாக திறக்கப்பட வில்லை இங்கு பணியாற்றிய நூலகருக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவது கிடையாது அதுவும் மிகவும் குறைந்த சம்பளம் இதனால் அவரும் வேலையில் இருந்து நின்று விட்டார், எனவே புதிதாக நூலகர் ஒருவரை நியமித்து செயல்படாத நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu